Also Watch
Read this
சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு பார்க்க சென்ற பிரபல ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட கரும்புக் காட்டுக்குள் வைத்து தலை துண்டித்து கொடூரமாக கொ* செய்யப்பட்ட சம்பவத்தில் கொ*யாளிகளை கைது செய்தாலும், பழிக்கு பழியாக கொ*கள் தொடரும், தலைகள் சிதறும் என இன்ஸ்டா ஸ்டோரி போடும் சில இளசுகள் போலீசாருக்கு பெரும் சவாலாக மாறிய நிலையில், அதிரடி ஆக்சன் எடுக்கப்பட்டு வருகிறது.

கரும்புக் காட்டுக்குள்...
போலீஸ் கேஸ், அரிவாள், கத்தியுடன் ரீல்ஸ் என வில்லாதி வில்லன் போல வலம் வந்த சுள்ளான் மதன் கொ* தான் சிவகங்கை போலீசுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், புதுப்பட்டியை சேர்ந்தவன் சுள்ளான் மதன். அடிதடி, மிரட்டல், பணம் பறிப்பு, கொ*, கொ* முயற்சி என சுள்ளான் மதன் மீது சுமார் 20 வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சுள்ளான் மதன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கிறான்.

ஜாமீனில் வெளியே வந்தவன், மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பார்க்க சென்றிருக்கிறான். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், சுள்ளான் மதனை
சுத்துப் போட்டு, கரும்புக் காட்டுக்குள் வைத்து கதையை முடித்திருக்கிறது.

பழிக்குப் பழியாக...
கடந்த ஆண்டு சிவகங்கை பேருந்து நிலையத்தில் வைத்து இரவோடு இரவாக ராஜேஷ் என்பவன் வெட்டிக்கொ* செய்யப்பட்டான். இந்த கொ* வழக்கில் ரவுடி சுள்ளான் மதனின் நெருங்கிய நண்பனான அருண் பாண்டியனும் சம்பந்தப்பட்ட நிலையில், ராஜேஷ் கொ*க்கு பழிக்கு பழி தீர்க்கப்படும் என அவனது நெருங்கிய கூட்டாளியும், ரவுடியுமான மிதுன் மாணிக்கம் இன்ஸ்டாவில் பதிவு போட்டிருக்கிறான்.

மிதுன் மாணிக்கத்தின் ஸ்டோரிக்கு பதிலடி கொடுத்து பதிவு போட்ட சுள்ளான் மதன், மிதுன் மாணிக்கத்தின் குடும்பத்தையும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
சாதாரணமாக சமூக வலைதளத்தில் போடப்பட்ட பதிவுகள் தான் கொ*ச் சம்பவத்திற்கு தொடக்கப் புள்ளியாக மாறியிருக்கிறது.

மூன்று பேர் கைது
இதிலிருந்து சுள்ளான் மதனை கொ* செய்தே தீருவேன் என ஸ்கெட்ச் போட்ட மிதுன் மாணிக்கம், நேரம் பார்த்து காத்திருந்து கரும்புக் காட்டுக்குள் வைத்து கொ* செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சுள்ளான் மதன் கொ* வழக்கில் சம்பந்தப்பட்ட பாலமுருகன், பாபு, பிரதீப் ஆகிய 3 பேரையும் போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சுள்ளான் மதனுடன் நெருக்கமாக இருந்தவர்கள். சுள்ளான் மதனுக்கு ஸ்கெட்ச் போட்ட மிதுன் மாணிக்கம் முதலில், அந்த கேங்கில் இருந்த மூன்று பேரை பேரம் பேசி தன் பக்கம் இழுத்து சதி திட்டம் தீட்டியிருக்கிறான்.

கிரைம் ஹிஸ்டரி
அடிதடி, வெட்டு குத்து வழக்கில் சிறைக்கு சென்ற சுள்ளான் மதன், அங்கு கிடைத்த நெட்வொர்க் மூலம் கூலிப்படை தலைவனாக மாறியிருக்கிறான். சிவகங்கை மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்து மாவட்டங்களிலும் பணத்திற்கு கொ* செய்வது, மிரட்டி பணம் பறிப்பது தான் சுள்ளான் மதனின் கிரைம் ஹிஸ்டரி.
சுள்ளான் BLOODS VS ராஜேஷ் பயலுகடா
சுள்ளான் மதனை கொ* செய்த கொ*யாளிகளை கைது செய்தும் கூட போலீசாருக்கு தலைவலி தீரவில்லை. ஏனென்றால், சுள்ளான் மதன் கொ*க்கு பழிக்கு பழியாக கொ*கள் நடக்கும் என அடுத்தடுத்து இன்ஸ்டா ஸ்டோரிகள் வலம் வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்பெல்லாம் ரவுடிகள் என்றாலே பாழடைந்த வீட்டுக்குள் பதுங்கி இருப்பார்கள் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். அப்படி தான் பல சினிமா படங்களிலும் பார்த்திருப்போம்.
ஆனால், சுள்ளான் மதன் மாதிரியான ஆட்கள், சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டு SHOW OFF செய்ததில் தான் ஆபத்தும் வந்திருக்கிறது. சுள்ளான் BLOODS, சுள்ளான் FANS என இன்ஸ்டா, யூடியூப்களில் 10க்கும் மேற்பட்ட PAGE-களில் சுமார் ஒரு லட்சம் பாலோயர்ஸ்கள் இருக்க, சுள்ளான் அண்ணனுக்காக என ஆள் ஆளுக்கு ஈசல் போல கிளம்பியது காவல்துறையை கிறுகிறுக்க வைத்துள்ளது.

வீடியோவால் தலைவலி
எப்போதுமே அரிவாள், கத்தி, ஐந்தாறு இளைஞர்கள் என படை பலத்துடன் இருக்கும் சுள்ளான் மதனின் ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து இது தான் கெத்து என நினைத்து சில 2கே கிட்ஸ்கள் தவறாக இன்ஸ்பையர் ஆகியிருக்க, மதனை கொ* செய்தவர்களை பழிக்கு பழி வாங்குவோம் என ரத்த வெறி பிடித்து வரிந்து கட்டிக் கொண்டு வீடியோ போட்டு வருகின்றனர்.
25 வயதிலேயே கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு போலீஸின் வாண்டடு லிஸ்டில் இருந்த சுள்ளான் மதனை, என்னமோ சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு PORTRAIT செய்து சில
அல்லு சில்லுகள் வீடியோ போட்டு எதிர் தரப்புக்கு சவால் விட்டு வருகின்றன.

சமூக வலைதள கணக்கு முடக்கம்
மேலும், சுள்ளான் மதன் சார்ந்த சமூகத்தை சேர்ந்த இளசுகளும், கொ*க்கு பழிவாங்குவோம் என கோதாவில் குதிக்க, இந்த இன்ஸ்டா சில்வண்டுகளை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
பழி வாங்குவோம் என போஸ்ட் போட்ட 20க்கும் மேற்பட்ட இன்ஸ்டா, பேஸ்புக் அக்கவுண்டுக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இன்னொரு பக்கம், சுள்ளான் மதன் ரத்த வெள்ளத்துடன் கிடக்கும் வீடியோவை பரப்பி, ’ராஜேஷ் பயலுகடா’ என கொண்டாடி வரும் மோசமான வீடியோக்களும் காவல்துறை கண்ணில் சிக்கியிருக்கிறது.

ரீல்ஸ் போதையில்...
கேங்ஸ்டர் கும்பலுக்கு ரீல்ஸ் வீடியோவும் போதையாக மாறி விட, அதன் மூலம் பல இளசுகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்பதே இந்த பதிலுக்கு பதில் கொ* என்ற பதிவுகள் உணர்த்தும் செய்தியாக உள்ளது.
சினிமா மோகமும், வில்லனிச காட்சிகளும் இந்த இளைஞர்களை எந்த அளவுக்கு மூளைச் சலவை செய்திருக்கிறது என்பதை உளவியல் ரீதியாக, சமூகமாக ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதிலும், சிவகங்கை மாதிரியான தென் மாவட்டங்களில் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி இல்லாததும் இளைஞர்கள் இப்படி ரவுடியீசத்தை நோக்கி செல்ல முக்கிய காரணம்.

வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள்
இயல்பாகவே தென் மாவட்டங்களில் சாதி ஆதிக்கமும் நிரம்பிக் கிடக்கும் என்ற நிலையில், அந்த புள்ளி தான் இது மாதிரியான பழிக்கு பழி என்ற படலத்திற்கும் காரணமாக மாறுகிறது. ஆகையால், ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் ரவுடியீசத்தை, குற்ற சம்பவங்களை FASHIONATE செய்து பல இளைஞர்களை சீரழிக்கும் முன்பே,போலீசும், அரசும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற உணர்வை விட பகை தீர்க்க வேண்டும், பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரீல்ஸ் வீடியோக்களில் வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள், இனியாவது திருந்தி செயல்பட பெற்றோர்களும், இந்த சமூகமும் வழிநடத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved