news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உட்கட்சி பூசல் காரணமாக த.வெ.க. நிர்வாகிகள் மோதல்
tv

Also Watch

tv

Read this

உட்கட்சி பூசல் காரணமாக த.வெ.க. நிர்வாகிகள் மோதல்

திருவாரூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜனநாயகன்

தமிழகம் முழுவதும் நேற்று தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்ட நிலையில் திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இதனை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் கோலாகலமாக கொண்டாடினர்.

இந்த நிலையில் முதல் காட்சி முடியும் தருவாயில் திருவாரூர் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆனந்த் தலைமையில் ஒரு பிரிவினர் திரையரங்க வளாகத்திற்குள் விதைப் பந்துகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.

மாவட்டக் கழக இணைச் செயலாளர் ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் மதனுக்கு இடையில் ஏற்கனவே கோஷ்டி பூசல் நிலவிவரும் நிலையில் திரையரங்கிற்குள் ஹாரன் ஒலித்தபடி மதன் கோஸ்டியினரின் கார் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.அப்போது இரண்டு பேரின் கால் மீது கார் சக்கரம் ஏறியதால் அதை ஆனந்த் கோஷ்டியினர் தட்டி கேட்டுள்ளனர்.


வாக்குவாதம் முற்றிய நிலையில் மாவட்டச் செயலாளர் மதன் தம்பி மனோஜ் மற்றும் அவருடைய நண்பர் தமிழ் ஆகியோர் ஆனந்த் கோஸ்டியை சேர்ந்த மாணவரணி
அமைப்பாளர் பசுபதி என்பவரை சரமரியாக தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் இதுவரை காவல் நிலையத்தில் எந்தவித புகாரும் கொடுக்காத நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோயிலில் குவிந்த கூட்டம்

திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோயிலில் குவிந்த கூட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேற்று நான் கண்ணீர் சிந்தியத்துக்கு இதுதான் காரணம்

0
44 mins agoshare
Minister parveshbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau