news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதீத வெயிலி கருகும் தென்னை மரங்கள்..!
tv

Also Watch

அதீத வெயிலி கருகும் தென்னை மரங்கள்..!

திருவாரூர்

4

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvr 1

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முத்துப்பேட்டை வடபாதிமங்கலம் பாரதிமூலங்குடி கண்கொடுத்தவணிதம் கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தென்னை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் குருவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆறு குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதுடன் போர்வெல் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது மேலும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் நிலவி வருவதன் காரணமாக கமலாபுரம் பாரதிமூலங்குடி ஓகைபேரையூர் வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வெயிலின் தாக்கத்தின் காரணமாக குருத்தோடு முற்றிலுமாக காய்ந்து கருகி கீழே விழுந்து மரம் பட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது

இதனால் தேங்காயின் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளது. மேலும் இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் அன்றாட தேவைகளுக்கு பொதுமக்களுக்கு தேவைப்படும் பொருளாக தேங்காய் இருப்பதால் தற்பொழுது வறட்சியின் காரணமாக தேங்காயின் வரத்து குறைவின் காரணமாக கடைகளில் கிலோ 100 ரூபாய்க்கு மேல் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved