Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி அருகே உள்ளது வெள்ளைப்பட்டி மீனவ கிராமம் இந்த கிராமத்தின் நடுவே அமைந்துள்ளது நல்ல ஆலோசனை மாதா ஆலயம் இந்த ஆலய புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கட்டுமானப் பணியில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் கட்டுமான பனியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இன்று கட்டிடத்தின் மேற்கூரை கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் மேற்கூரை மேலே ஏற்றப்பட்டு கட்டுமான பணி நடைபெற்றது இந்த நிலையில் திடீரென மேற்கூரை கீழே இடிந்து விழுந்து சேதமானது.
மேற்கூரை கீழே இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் உள்ளே சிக்கிக்கொண்டனர் இதைத்தொடர்ந்து உள்ளே இடுபாடுகளுக்குள் சிக்கித் தவித்த கட்டிடத் தொழிலாளர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த நபர்கள் உடனடியாக அவர்களை மீட்க துவங்கினர் மேலும் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி மாட்டிக்கொண்டு காயமடைந்த
உள்ளிட்ட கட்டிட தொழிலாளர்கள் 10 பேரை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி லேசான காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved