news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் தர்ணா
tv

Also Watch

மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் தர்ணா

நடவடிக்கை எடுக்கவில்லை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நிதி வழங்கவில்லை

மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலை பணிகள், குடிநீர், கால்வாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், என பல திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு அதற்கான பணம் வழங்காமல் மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலம் மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர், மறைமலைநகர் நகரமன்ற தலைவர் என பல இடங்களில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் மறைமலைநகர் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தரார்களிடம் மறைமலைநகர் நகரமன்ற தலைவர் சண்முகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நிலுவையில் உள்ள பணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் கூறுகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக மறைமலைநகர் நகராட்சியில் பல பணிகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதற்கான பணத்தை மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் வழங்காமல் மெத்தமாக இருப்பதாகவும் மறைமலைநகர் நகராட்சி ஆணையர் கூடுவாஞ்சேரி நகராட்சி பொறுப்பு ஆணையராக பணியாற்றுவதால் மறைமலைநகர் நகராட்சி பணிகளை மேற்கொள்வதில்லை.

கூடுவாஞ்சேரி நகராட்சி பணிகளை மட்டுமே மறைமலைநகர் நகராட்சியில் இருந்துக்கொண்டே மேற்கொண்டு வருகின்றார் மேலும் மறைமலைநகர் நகராட்சி ஆணையரின் மெத்தனத்தால் பல இடங்களில் குடிதண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு பணம் கொடுத்து லாரியில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

மறைமலைநகர் நகராட்சியில் 400 கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் 50க்கும் அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவையில் உள்ள சுமார் 40 கோடி ரூபாய் பணத்தை வழங்க மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Related Link
நாகப்பட்டினத்தில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்

நாகப்பட்டினத்தில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் தர்ணா

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved