கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த ஜீனத் நிஷா என்பவர் தனது 5 மாத குழந்தையை தூக்கி கொண்டு தொழுகைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது, சாலையில் சண்டையிட்டு கொண்டிருந்த மாடுகள் முட்டியது. இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.