news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சேதமடைந்த சாயக்கிண்ணங்கள், கருப்பு நிற பானை
tv

Also Watch

tv

Read this

சேதமடைந்த சாயக்கிண்ணங்கள், கருப்பு நிற பானை

கீழடி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கீழடி, சிவகங்கை

சாயக்கிண்ணங்கள், கருப்பு நிற பானை  :

கீழடியில் நடந்து வரும் 11ம் கட்ட அகழாய்வில் முழுமையான அளவில் வட்டப்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் கஜேந்திரன் என்பவரது நிலத்தில் 11ம் கட்ட அகழாய்வு மார்ச் 18 முதல் நடந்து வருகிறது.

இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு செங்கல் கட்டுமானம், சாய கிண்ணங்கள், குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானை உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன. உருண்டை வடிவில் பானைகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில்.

கீழடியில் 5ம் கட்ட அகழாய்வின் போது வித்தியாசமான வடிவில் வட்ட வடிவிலான பானை மேற்பகுதி சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் அதன் பயன்பாடு குறித்து சரிவர தெரியாத நிலை ஏற்பட்டது. 11ம் கட்ட அகழாய்வின் போது அதே போன்று சிறிய வடிவிலான வட்டப்பானை முழுமையாக கிடைத்துள்ளது.

அருகிலேயே சேதமடைந்த சாயகிண்ணங்களும், கருப்பு நிற பானையும், இருவண்ண வாய் அகன்ற சுடுமண் பாத்திரமும் கண்டறியப்பட்டுள்ளது. 11ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட ஏழு
குழிகளிலும் செங்கல் கட்டுமானங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. எனவே சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையான கட்டடங்கள் கீழடியில் பயன்பாட்டில் இருந்தது தெரிவந்துள்ளது.

Related Link
சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான கார்

சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான கார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உண்மையான சிறுத்தை பல் பதித்த செயின்தான் என்பது உறுதி

1
9 mins agoshare
வேடனுக்கு சிக்கல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved