news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக, அதிமுக ரகசிய டீலிங் - விஜய் பேச்சு
tv

Also Watch

திமுக, அதிமுக ரகசிய டீலிங் - விஜய் பேச்சு

தஞ்சை, செங்கிப்பட்டி

100

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுகவும், அதிமுகவும் தங்களுக்குள், ரகசிய டீலிங் செய்து கொண்டு வேறு யாரும் வந்து விடாதபடி அரசியல் செய்து வருவதாக விஜய் புகார் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் 2ஆவது முறையாக திமுக ஆட்சி அமைந்தது கிடையாது, அமையவும் அமையாது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தவெக நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது;
வேலூர் கூட்டத்தில் தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என்று கூறினேன். தமிழக மக்களின் உண்மையான பிரதிநிதி நாம் என்பதற்கு தான் அப்படி கூறியிருந்தேன். விஜய் vs ஸ்டாலின் சார் எனக் கூறியிருந்தேன். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு டெல்லியை பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேட்டிருந்தேன். உடனே விஜய், பாஜகவிற்காக பேசுவதாக நான் பேசியதை திரித்துப் பேசுகின்றனர். சிறுபான்மை சகோதரர்களை பயமுறுத்தி, ஏமாற்று வேலை செய்தவர்கள், அதை இனிமேல் செய்ய முடியாது என தெரிந்துகொண்டு நான் பேசுவதை திரித்துப் பேசி, தில்லுமுல்லு வேலை செய்கின்றனர்.

எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் இது ‘எமோஷன்’
தமிழகம் தான் தவெக. தவெக தான் தமிழகம். இது தேர்தலுக்கான உறவு இல்லை. இது, இயற்கையாக உருவான உறவு. இதை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கும் என்னுடைய மக்களுக்கும் நடுவில் யாராலும் நுழைய முடியாது. அம்மா - பையன், அப்பா - பையன், அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி உறவு இது. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். மற்றவர்களுக்கு இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் இது ‘எமோஷன்’.

தேர்தலில் விசில்
சென்னையில் ‘டெல்லி, டெல்லி’ எனக் கூவுகிறார்கள், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்தால் டெல்லிக்கு வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். டெல்லி அணி, அந்த அணி, இந்த அணி என எல்லா அணியும் இந்த தேர்தலில் நொறுங்கும். தவெக அடித்து நொறுக்கும். கிரிக்கெட்டில் விசில் போடுறது நம்ம சிஎஸ்கே. வரவிருக்கும் தேர்தலில் விசில் போட போவது நம்ம தவெக. ‘ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி’ என்று, சின்ன குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும்
விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே, விஜய்யை நம்புகிறீர்கள் தானே. ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் கேட்கும் தானே. அந்த விசில் சத்தம் ஒவ்வொரு பூத்திலும் புயலாக ஒலிக்கும் தானே. கடவுளுக்கே படையல் போடும் உயர்ந்த மனிதர்கள் தான் விவசாயிகள். மறுபிறவி, மறுஜென்மம் பற்றி எனக்குத் தெரியாது. அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும். விவசாயம் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால், அவர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். டெல்டாகாரன் என சொல்லும் நீங்கள், விவசாயிகளிடம் துணை நின்றதுண்டா?

தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது
‘தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு திவால் ஆகப்போகிறது’ என்று சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். உண்மையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. காரணம், நிலத்தடி நீரை பாதுகாக்காமல் இருப்பதுதான். மணல் கொள்ளைக்குக் காரணமான மணல் மாஃபியா குழுக்களுக்கு ஆதரவு கொடுப்பது உங்களுடைய திமுக அரசு. உங்களுடைய ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மூட்டைகள் வீணாகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மாறாக, விவசாயிகளை குண்டர் சட்டத்தில் தான் போடத் தெரியும்.
நீரில் சென்று அணைகளை ஆராய்வது வரைக்கும் எனக்குத் தெரியும். அமைதியாக இருப்பதால் எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள். ஒருவர் அமைதியாக இருப்பதால் அவருக்கு ஒன்றும் தெரியாது என்றில்லை.

இரண்டாவது முறை ஆட்சிக்கு வரவே முடியாது
மீனவர்கள் விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவார். அடுத்த முறை முதல்வர் நான் தான் என ஸ்டாலின் சொல்கிறார். இது நடக்க வாய்ப்பே இல்லை. திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வரவே முடியாது. அவரது தந்தையாலே அது முடியவில்லை
இவ்வாறு விஜய் உரையாற்றினார்.


Related Link
பச்சை துண்டுடன் மேடையேறி விஜய் அதிரடி பேச்சு

பச்சை துண்டுடன் மேடையேறி விஜய் அதிரடி பேச்சு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-4

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved