காங்கிரஸிடம் தொங்கி கொண்டிருக்கிறது : பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனியார் ஹோட்டல் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "கிமு, கிபி என்று கூறுவார்கள். அதுபோன்று பிரதமர் மோடி கூட்டத்திற்கு முன்பாக ஜனநாயக கூட்டணி எப்படி இருந்தது? கூட்டத்திற்கு பின்பு ஜனநாயக கூட்டணி எவ்வளவு வலுவடைந்துள்ளது என பார்க்க வேண்டும். மக்கள் மத்தியில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். கூட்டணிக்கு தலைமை பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அசைக்க முடியாத முதல்வராக இடம் பெறுவார். அதனால் தான் இன்று நமது முதலமைச்சர் கூவி கூவி கூட்டணிக்கு அழைக்கிறார். எங்கள் கூட்டணி கடை விரித்து வைத்தும் யாரும் வரவில்லை என்று கூறினார் முதலமைச்சர். தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்துவது போன்று ஒருவர் முன்பு நின்று ஹோட்டலுக்கு வாங்க இங்கு நல்ல சாப்பாடு விருந்து உள்ளது என அழைப்பார். அதுபோன்று கூட்டணிக்கு திமுக அழைப்பு விட்டு வருகிறார்கள் தற்போது காங்கிரஸ் இடம் தொங்கிக் கொண்டு இருக்கிறார். எடப்பாடியாரை பார்த்து இன்று இருக்கின்ற முதலமைச்சர் பயந்து நடுங்கி விட்டார். முதலமைச்சர் வெளிய பில்டிங் ஸ்ட்ராங் ஆனால் உள்ளே பயந்து நடுங்கி கொண்டு இருக்கிறார். இந்தக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் மக்கள் மத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையை பெறும். சிறந்த ஆட்சியை எடப்பாடி தருவார். மோடி ஜி அவர்களிடம் பல திட்டங்களை பெற்று தமிழ்நாடு பலமாக இருக்கும். மீண்டும் அமைதி பூங்காவாக தமிழ்நாடு திகழும். கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு வாங்க தலைவா வாங்க என கூறிவிட்டு சென்றார். Related Link டாப் ரோலில் இருக்கிறவர் தவெகவில் இணைகிறார்