Also Watch
Read this
By: Fyrose Banu

பட்டப் பகலில் இடம் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் எட்டு சவரன் தங்க நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பெண்ணை ஏமாற்றி நகை பறிப்பு
பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் திருமுருகன் மனைவி ஜெயபாரதி (38). கணவரை பிரிந்து வாழும் இவர் போக்குவரத்து நகரில் மகனுடன் வசித்து வருகிறார்.

நிலம் வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய நபர்கள்
ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வரும் நிலையில் இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் இரண்டு தினங்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

கழுத்திலிருந்த 8 சவரன் நகையை பறித்து சென்ற பயங்கரம்
அப்போது ஜெயபாரதியின் வாயில் துணியை வைத்து அடைத்து கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது கூச்சலிட்டு கத்தியதால் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயபாரதியின் உள்ளங்கையில் காயத்தை ஏற்படுத்தி விட்டு கழுத்தில் அணிந்திருந்த எட்டு சவரன் தங்க நகையை வைத்துக்கொண்டு இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி
காயமடைந்த ஜெயபாரதி பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நிலம் வாங்குவது போல் நடித்து பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த 8 சவரன் தங்க நகையை பட்டப்பகலில் பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved