Also Watch
Read this
By: Fyrose Banu

தஞ்சையில் திருமணம் நடைபெற்ற முடிந்த கையோடு பிஎட் பருவத் தேர்வுகள் எழுதிய புதுமண பெண்கள் 
தேர்வுகள் எழுதிய புதுமண பெண்கள்
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் பிஎட் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு கல்லூரிகளுக்கு தேர்வு மையமாக அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.


திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மதுமிதா
இந்நிலையில் சோழபுரம் பகுதியை சேர்ந்த மதுமிதா என்ற மாணவிக்கு கருணாகரன் என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்து முடிந்த கையோடு தேர்வு மையத்திற்கு மணக்கோலத்தில் வந்த மாணவி தேர்வு எழுதினார்.

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய சத்யகீதா
இதேபோல் கரம்பயம் பகுதியை சேர்ந்த சத்யகீதாவுக்கு, அய்யப்பன் என்பவருடன் இன்று காலை திருமணம் நடைபெற்ற நிலையில், அவரும் திருமணம் முடிந்த கையோடு குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதினார்.