Also Watch
Read this
By: Manigandan Raja

3 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது :
ராமர் கோயில் நன்கொடை 7 கோடி ரூபாய் வரை திருடப்பட்ட வழக்கில் கைதான எட்டு பேருக்கும் 3 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கோயில் பணியாளர்கள் 6 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து சுமார் 80 லட்ச ரூபாய் விசாரணையின் போது சிறப்பு புலனாய்வு குழு மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்கொடை பணத்தில் மோசடி செய்தவர்களை விடக்கூடாது :

ராமரின் பெயரால் ஆட்சிக்கு வந்த பாஜகவை, ராமரே ஆட்சியிலிருந்து தூக்கியெறிவார் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கொந்தளித்துள்ளார். மோசடியாளர்களையும் அவர்களை ஆதரிக்கும் கட்சியையும் மக்கள் புறக்கணிக்காவிட்டால் அந்த பாவத்திற்கு மக்களும் ஆளாகிவிடுவார்கள் என்றார்.
ராமர் கோயில் நன்கொடை பற்றி கேள்வி எழுப்பும் கட்சிகள் :
ராமர் கோயில் நன்கொடை பற்றி கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள் ஏன் பாபர் மசூதி கட்டுமானத்திற்காக வசூலிக்கப்படும் நன்கொடையை பற்றி கேள்வி எழுப்புவதில்லை என உத்தரபிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் வினவியுள்ளார். இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிக்காக பாபர் மசூதி நிதி முறைகேடு தொடர்பாக காங்கிரசும், சமாஜ்வாடியும் வாய்திறப்பதில்லை என சாடினார்.