Also Watch
Read this
By: Manigandan Raja

பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500-ஆக உயர்வு :
36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், தட்கல் பாஸ்போர்ட் முறை 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் 3 ஆயிரத்து 500 ரூபாயகவும், தட்கல் பாஸ்போர்ட் முறை 6 ஆயிரம் ரூபாயகவும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு ,ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
வங்கதேசத்திற்கான இந்திய தூதருக்கு கேபினட் அந்தஸ்து :

சமீபத்தில் வங்கதேசத்திற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த தினேஷ் திரிவேதிக்கு, கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. அரசின் முன்னுரிமைப் பட்டியலில் அவருக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ள இந்த உயரிய அந்தஸ்து, அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்றனர் :

தமிழ்நாட்டின் பிரவீன் சக்கரவர்த்தி உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து காலியான 1 மாநிலங்களவை இடத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான தவெகவின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றித் தேர்வானார்.