Also Watch
Read this
By: Manigandan Raja

மேற்கு ஆசிய நெருக்கடி தணிந்ததால் தளர்வுகள் அறிவிப்பு :
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக விதிக்கப்பட்டிருந்த வணிக சிலிண்டர்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு முழுமையாக நீக்கியது.வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கான Bulk LPG விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதை 50 சதவிகித அளவுக்குத் தளர்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு LPG உற்பத்தி மற்றும் இறக்குமதி சீராக உள்ளதால் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்..?

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷா நேரில் சந்தித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.
மத்தியில் கூட்டணி ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்கள் சிலருக்கு ராஜ்யசபா பதவிக்காலம் விரைவில் முடிவதால் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது.
மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் உளவுத்துறைப் பிரிவின் புதிய இயக்குநராக நியமனம் :

உளவுத்துறை நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றில் பல ஆண்டு கால அனுபவம் கொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித், உளவுத்துறைப் பிரிவின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது வலுவான கள அளவிலான உளவு வலையமைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நிபுணரான தீட்சித், ஊடுருவல் உள்ளிட்ட பல முக்கியப் பணிகளைக் கையாண்டுள்ளார்.