news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கனமழை காரணமாக வெள்ளக்காடாக மாறிய தைவான்
tv

Also Watch

tv

Read this

கனமழை காரணமாக வெள்ளக்காடாக மாறிய தைவான்

தைவான்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தைவான்

போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதி :

தைவானில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின..! குடியிருப்புகள், கட்டடங்கள், சாலைகள் என கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டு, அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

அண்டை நாடான ஜப்பானிலும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன.

தரையில் மோதுவது போல் பறந்த போயிங் ரக சரக்கு விமானம் :

அமெரிக்காவில் டெக்சாஸில் தரையில் மோதுவது போல் பறந்த போயிங் ரக சரக்கு விமானம் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பியது. போயிங் 777 சரக்கு விமானம் ஒன்று, டெக்சாஸ் விமானத்தளத்தின் மீது வழக்கத்திற்கு மாறாகத் தாழ்வாகப் பறந்து பின்னர் திடீரென வலது புறமாக திரும்பியது.

அதன் வலது இறக்கை தரையில் மோதுவது போல் வந்து கடந்து சென்ற வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், அபாயகரமான வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் உலகம் முழுவதும் 1,00,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு : 

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் 2-ஆவது மிகப்பெரிய கார் நிறுவனமாக ஃபோக்ஸ்வேகன், உலகம் முழுவதும் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அந்நிறுவனத்தின் 89 ஆண்டு கால வரலாற்றில் மிகப்பெரிய முடிவாக பார்க்கப்படுகிறது.

வரி உயர்வு, சீன கார் நிறுவனங்களின் போட்டி மற்றும் மின்சார வாகனங்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் வருவாயில் ஃபோக்ஸ்வேகன் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ஆட்களை குறைப்பது மட்டுமின்றி ஜெர்மனியில் உள்ள 4 ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Related Link
கரடி போல் நடிக்க  மாதம் ரூ.1.1 லட்சம் சம்பளம்

கரடி போல் நடிக்க மாதம் ரூ.1.1 லட்சம் சம்பளம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

0
2 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau