Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்காவின் Anthropic நிறுவனம் பகிரங்க குற்றச்சாட்டு :
சீனாவின் Alibaba நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய AI தொழில்நுட்பத் திருட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் Anthropic நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
25,000 போலி கணக்குகள் மூலம் Anthropic-ன் அதிநவீன Claude Al மாடலிடம் ஏப்ரல் 22 முதல் ஜூன் 5 வரை, 2 கோடியே 88 லட்சம் கேள்விகள் கேட்டு அதன் திறன்களை Alibaba திருடி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விசித்திரக் கோள்களை கண்டறிந்த நாசா :

(Courtesy:Nasa)
வியாழன் கோளைப் போன்ற பிரமாண்டமான, ஆனால் பஞ்சு மிட்டாயை விட மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட 2 விசித்திரமான கோள்களை நாசா கண்டறிந்துள்ளது. பூமிக்கு அப்பால் 1,110 ஒளியாண்டு தொலைவிலுள்ள இவை, முற்றிலும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் நிரம்பியுள்ளதாகவும், வியாழனை விட 35 மடங்கு குறைந்த எடை மட்டுமே கொண்டுள்ளதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோள்களுக்கு TOI-791 b, TOI-791 c எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவை ஒட்டுமொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம் :

வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே மக்களுக்கு ஆண்ட்ராய்டு போனில் உள்ள கூகுள் எச்சரிக்கை செய்தியை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நில நடுக்கத்தைக் கண்டறியப் பெரிய அளவிலான நில அதிர்வு மானிகள் தேவைப்படும்.
ஆனால், கூகுள் நிறுவனம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களையேசிறிய அளவிலான நில அதிர்வு மானி களாக மாற்றியுள்ளது. இவை நிலநடுக்கத்தின் போது ஏற்படும் ஆரம்பக்கட்ட மிக நுண்ணிய அதிர்வுகளை உடனடியாகக் கண்டறிந்து எச்சரிக்கை செய்தியை அனுப்பும் என சொல்லப்படுகிறது. வெனிசுலாவிலும் இதே போல் அதிர்வை கண்டறிந்து பேரழிவு ஏற்பட்ட சில விநாடிகளுக்கு முன்பே எச்சரித்ததாக தகவல் கிடைத்துள்ளது.