news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இந்திய கம்யூ. முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கவலை
tv

Also Watch

tv

Read this

இந்திய கம்யூ. முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கவலை

காட்டூர் - திருவாரூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மாநில செயலாளர் முத்தரசன்

பைத்தியங்கொலி தனமாக கானும் என்கிறார்.யாரும் யாரையும் காணாமல் அடித்து விட முடியாது.மு க ஸ்டாலின் கலந்துகொண்ட திருமண நிகழ்சியில் முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பரபரப்பு பேச்சு.

திருவாரூர் அருகே காட்டூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழா முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது.

முன்னாள் அமைச்சர் மதிவாணன் மிகுந்த கொள்கை பற்று மிக்கவர். கொள்கை பற்றுதான் முக்கியம். ஆற்று படுகைகளில் ஆடு,மாடுகள் மேயும் அப்போது இந்தப் பக்கத்திலிருந்து அந்த கரையை பார்க்கும் போது பசுமையாக தெரியும்,இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லுவார்கள், முதலில் ஒரு ஆடு செல்லும் அதனைத் தொடர்ந்து ஒரு மாடு பின்னர் ஒரு மந்தையே காலியாகி அந்தப் பக்கம் சென்று விடும்.

அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும்.எங்கேயாவது கொஞ்சம் பச்சை தெரியும் அங்கு ஒன்றுமே இருக்காது. காய்ந்து போய் கிடக்கும்.வந்து விட்டோம்,உடனே திரும்பி விட்டால் அந்தப் பகுதி நம்மை ஏற்றுக் கொள்ளுமா ஏற்றுக் கொள்ளாதா? என தெரியாது.

இரண்டு நாள் இருந்துவிட்டாவது சென்று விடுவோம் என்று, இப்படியான ஒரு சூழல் உள்ளது. இதனை யாரை குறிப்பிட்டு நான் சொல்லவில்லை பொதுவாக சொல்லுகிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலினை திருவாரூர் இல்லத்தில் சந்தித்து விட்டு வெளியே வந்த போது நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், என்னை வழக்கமாக அப்பா என கூப்பிடுவதை
தவிர்த்துவிட்டு அண்ணன் என்று அழைத்தார்.ஏன் என்னை அப்பா என்று கூப்பிடுவதை மாற்றி கூப்பிடுகிறீர்கள் என கேட்ட போது நீங்கள் தான் மாறிவிட்டீர்களே என்று தெரிவித்தார்.

கூட்டணி மாறியதைப் பற்றி தெரிவித்தார். பைத்தியங்கொலி தனமாக காணும் என்று கூறுகிறான் யாரையும் யாரும் காணாமல் அடித்து விட முடியாது.எதை காணோம். நான் நீண்ட நாட்களாக ஸ்டாலினை பார்க்கவில்லை.

நாங்கள் இருவரும் ஒரே ஊர்காரர்கள். தேர்தலுக்குப் பிறகு நான் பார்க்கவில்லை. எப்படி இருக்கிறாரோ?சங்கடமாக இருப்பாரா என்று யோசனை செய்து கொண்டு சென்றேன்.முந்தாநாள் பார்த்த அதே ஸ்டாலினை தான் வழக்கமான உபசரிப்பை செய்தார்.

இந்த உரையாடல் தொடரும். சென்ற ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு அமோகமாக சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு தண்ணீர் இல்லை திறக்கவில்லை.ஒரு போக சாகுபடியாவது நடைபெறுமா? ஏற்கனவே நான்கு அணைகள் கட்டிய கர்நாடகா மேலும் ஒரு அணை கட்டப் போகிறேன் என்கிறார்கள்.

இதனை தடுப்பதற்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. டெல்டா பகுதியில் ஒரு போக சாகுபடி நடைபெறுமா என்ற அச்சம்,கவலை உள்ளது.மணமக்கள் உழைப்பின் மகத்துவத்தை அறிந்து வாழ வேண்டும் என்றார்.

Related Link
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் "டிராபிக் ஜாம்"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

0
1 min agoshare
ஷபாலி வெர்மா அதிரடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau