news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு
tv

Also Watch

tv

Read this

அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு

செக்காணூரணி, மதுரை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமைச்சர் ஆய்வு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி அரசு உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் மாணவ-மாணவிகள் விடுதியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் எம்எல்ஏ - க்கள் கல்லானை, விஜய் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது பள்ளி கட்டமைப்பு வசதி, விடுதிகளில் கழிப்பறை மற்றும் உணவின் தரம் குறித்து உணவை உண்டு அமைச்சர் ஆய்வு செய்தார்., மேலும் ஆய்வின் போது முதல்வர் விஜய் நடித்த படத்தின் பாடல்களை மாணவர்கள் இசைக்கருவிகள் மூலம் இசைத்து காட்டியதை அமைச்சர் ரசித்து மாணவர்களை பாராட்டினார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார் : 

பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மக்களுக்கு டிஎன்டி ஒன்றை சான்று கோரிக்கை முதல்வரின் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது அவர் நல்ல முடிவை எடுப்பார் என்றும்.

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது விரைவில் சரி செய்யப்படும் என்றும், கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.

விடுதிகளில் பராமரிப்பு குறைபாடுகள் உள்ளது அதை அதிகாரிகள் காலம் தாழ்த்தாது சரி செய்ய உத்தரவிட்டுள்ளோம் என பேட்டியளித்தார்.

Related Link
சார்பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் ஆய்வு

சார்பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் ஆய்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

0
21 mins agoshare
ஷபாலி வெர்மா அதிரடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau