Also Watch
Read this
By: Web Team

கடலோர ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து மத்திய மகாராஷ்டிரா வரை தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்ல அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு குறித்து பார்க்கலாம்.
ஜூன் 27-ஆம் தேதிய பொறுத்த வரையில் தமிழகத்துல ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவே 28-ஆம் தேதிய பார்த்தோம் என்றால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருக்கு.
29ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கு.
இதைத்தொடர்ந்து 30ஆம் தேதியில் இருந்து ஜூலை 2-ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை அலர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கு.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கு.