Also Watch
Read this
By: Manigandan Raja

ஜூன் 26 நாளை மொஹரம் பண்டிகை, அதன் தொடர்ச்சியாக 27 சனிக்கிழமை, 28 ஞாயிற்றுக்கிழமை என தொடர் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊரான திருச்சி, மதுரை, கோவை, நெல்லை என தென் மாவட்டத்தை நோக்கி படையெடுத்துள்ளனர் ஒரே நேரத்தில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கார், வேன், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் தென் மாவட்டத்தை நோக்கி செல்வதால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு பணியில் உள்ள தாம்பரம் மாநகர போலீசாரும் போக்குவரத்து போலீசாரும் நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.