news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டமன்ற அலுவலக திறப்பு விழா
tv

Also Watch

tv

Read this

சட்டமன்ற அலுவலக திறப்பு விழா

அம்பத்தூர் - சென்னை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சட்டமன்ற அலுவலக திறப்பு

புதுப்பிக்கப்பட்ட அம்பத்தூர் சட்டமன்ற அலுவலகத்தை நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் குத்துவிளக்கு ஏற்று துவக்கி வைத்தார்.அம்பத்தூர் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்த பின் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் அமைச்சரை தன்னுடைய இருக்கையில் அமர வைத்தார்.பின்னர் அமைச்சர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகனை சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில் பாலமுருகனை அமர வைத்தார்.

சட்டமன்ற அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுத்த 41 மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும், 7 சிறுவர் சிறுமிகளுக்கு மிதிவண்டியும்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5 பள்ளிகளுக்கு கணினியும், நலிவுற்ற 12 மகளிருக்கு தையல் இயந்திரத்தையும் அமைச்சர் ஆனந்த் வழங்கினார்.

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி என பிரதத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. செயலியில் சட்டமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை மனுக்கள், புகார்கள் உள்ளிட்டவைகளை ஒரே செயலி மூலம் மக்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வடை பாயாசத்துடன் சமபந்தி நிகழ்வு நடைபெற்றது. பந்தியில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அமைச்சர் ஆனந்த் உணவு பரிமாறினார்.

நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ் பாபு : 

நான் இருந்த கட்சியில் தலைவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள்.மதிப்பு என்ன என்பதை இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் எங்களை பேச வைத்திருந்தால் அவ்வளவு தான் இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என கூறினார்.

எங்கள் கட்சியை பொறுத்த வரையில் முதலமைச்சர் யானை,கட்சியின் போது செயலாளர்தான் சிங்கம், யானை பொறுமையாக இருக்கும் கோபம் வந்தால் மிதித்து தள்ளிவிடும் அதுபோலத்தான் எங்களுக்கும் என தெரிவித்தார்.

சட்டமன்ற அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற கொறடா சபரிநாதன்,கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ் பாபு ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், அண்ணா நகர்
சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தாமு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related Link
மூன்று தகர ஷீட்டுக்குள் வாழ்வதாக சிறுமி கண்ணீருடன் கோரிக்கை

மூன்று தகர ஷீட்டுக்குள் வாழ்வதாக சிறுமி கண்ணீருடன் கோரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 26062026

0
18 mins agoshare
ராசி பலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau