news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பயணிகள் வராததால் வெறிச்சோடிய பேருந்து நிலையம்
tv

Also Watch

tv

Read this

பயணிகள் வராததால் வெறிச்சோடிய பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம், சென்னை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கிளாம்பாக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இன்று முதல் மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை மற்றும் சனி ஞாயிறு வார விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை எதிரொலியாக சென்னையில் வசித்து வரும் ஏராளமான தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 525 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட போக்குவரத்து துறை சார்பில் திட்டமிடப்பட்டது.

அதன்படி மதுரை திருச்சி திண்டுக்கல் சேலம் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்தபடி இன்று பயணிகள் வருகை தராததன் காரணமாக ஏராளமான பேருந்துகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்த சிறப்பு பேருந்துகள் பேருந்து நிலையத்தின் நடைமேடைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் போதிய அளவில் பயணிகள் வராததால் பேருந்துகளை இயக்குவதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்து நிலையம் நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் ஓய்வெடுத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் பயணிகளின் வருகை என்பது அதிகரித்து காணப்பட்ட நிலையில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள்
பயணிகளால் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் சென்னையின் மாநகர பகுதிகளில் இருந்து இயக்கபடுவதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளில் செல்கின்றனர்.

சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பயணிகள் சென்னை மாநகர பகுதிகளிலிருந்து மாநகர பேருந்துகள் மூலமாக கிளாம்பாக்கத்திற்கு வருகை தந்து அரசு பேருந்துகளில் ஏறிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

Related Link
சட்டமன்ற அலுவலக திறப்பு விழா

சட்டமன்ற அலுவலக திறப்பு விழா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 26062026

0
20 mins agoshare
ராசி பலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau