Also Watch
Read this
By: Manigandan Raja

தி இந்தியா ஸ்டோரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது :
டி.கே.சேட்டன் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தி இந்தியா ஸ்டோரி திரைப்படம், விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதுதொடர்பான ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியும், சமூக பிரச்சினையை மையப்படுத்தியும் உருவாகியுள்ளது. இப்படம் ஜூலை 24ம் தேதி வெளியாகவுள்ளது.
ராஜமௌலியின் "வாரணாசி" படப்பிடிப்பு அக்டோபரில் முடிகிறது :

இயக்குநர் ராஜமௌலியின் பிரமாண்ட படைப்பான "வாரணாசி" படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபருக்குள் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்கள் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் உலகளவில் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது.