Also Watch
Read this
By: Manigandan Raja

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்து தொடர்பாக பேச்சு :
ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்து தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் உரையாடிய ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜாயித், கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இஸ்ரேல் - லெபனான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து :

போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்காவின் சமரச முயற்சியின் பலனாக வாஷிங்டனில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெப்ப அலை பாதிப்பால் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள் :

வெப்ப அலையின் தீவிர பாதிப்பு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஹங்கேரி போன்ற நாடுகளில் வெப்ப அலையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள சூழலில், மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.