Also Watch
Read this
By: Manigandan Raja

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலா :
இரட்டை நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலா நாட்டிற்கு உதவும் வகையில், "ஆபரேஷன் அமிஸ்டாட்" (( Operation Amistad )) என்ற பெயரில் இந்தியா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதற்காக, இந்திய விமானப்படையின் இரண்டு C-17 ரக விமானங்கள் மூலம், 35 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வெனிசுலா நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு :
வெனிசுலா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ள நிலையில் 3 ஆயிரத்து 360 பலத்த காயமடைந்துள்ளனர். வெனிசுலா நாட்டில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், La Guaira மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.