Also Watch
Read this
By: Manigandan Raja

வியக்கவைக்கும் ஃபிபா உலக கோப்பையின் மாதிரி :
துபாயில் இந்திய வம்சாவளி நகை வியாபாரி ஒருவர் தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, ஃபிபா உலக கோப்பையின் மாதிரியை தங்கம் மற்றும் வைரக்கற்களை கொண்டு வடிவமைத்து அசத்தியுள்ளார்.
பெரும்பணக்காரர்கள் மற்றும் பிரபலங்களுக்காக பிரத்யேகமாக நகைகளை வடிவமைத்து வரும், நகை வடிவமைப்பாளரான ஹேமந்த் கரம்சந்தானி என்பவர், இந்த கோப்பையை வடிவமைத்துள்ளார்.
525 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிப்பு :

மியான்மரில் பல்வேறு நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 28 டன்களுக்கும் அதிகமான மெத்தம்பெட்டமைன் உட்பட, சுமார் 525 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களை அதிகாரிகள் தீயிட்டு எரித்தனர்.
நாட்டில் விரிவடைந்து வரும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்களே காரணம் என இராணுவ அரசாங்கம் குற்றச்சாட்டினர்.
109 மாடி உயர கட்டடத்தின் மீது சிறிய விமானம் மோதல் :

சீனாவில் சிறிய ரக விமானம் 109 மாடிகள் கொண்ட கட்டடத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளான காட்சி வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர்? அவர்கள் நிலை என்ன என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை. விமானம் மோதியதை அறிந்து, கட்டடத்தில் இருந்தவர்கள் பீதியில் அலறி ஓடினர்.