news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home bigstoriesnews அதுசரி.. அவங்களுக்கும் பசிக்கும்ல..!
tv

Also Watch

tv

Read this

அதுசரி.. அவங்களுக்கும் பசிக்கும்ல..!

புதுக்குடியிருப்பு, ராமநாதபுரம்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அரசுப்பேருந்து ஓட்டுநர்

திடீரென புதுக்குடியிருப்பில் நிறுத்தப்பட்டது : 

ராமநாதபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை வழியாக பெரியப்பட்டினம் நோக்கி 4F என்ற அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. மாலை 4.30 மணி என்பதால் பள்ளி முடிந்து மாணவர்களும் அந்த பேருந்தில் ஏறி இருந்தனர் அந்த பேருந்தை அஜித்குமார் என்பவர் இயக்க, வேல்முருகன் என்பவர் கன்டக்ராக இருந்த நிலையில் திடீரென புதுக்குடியிருப்பில் நிறுத்தப்பட்டது.

வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக வந்துள்ளனர் : 

ஏன் நிற்கிறது? என்ன காரணம்? என எதுவுமே புரியாமல் பேருந்துக்குள் இருந்த பயணிகள் தங்களுக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருக்க, அங்குள்ள ஒரு திருமண வீட்டிற்கு சென்ற டிரைவரும், கண்டக்டரும் மொய்யெழுதிவிட்டு, வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக வந்துள்ளனர்.. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேருந்துக்குள் இருந்த பெண் பயணிகள் இதனை வீடியோ எடுத்துள்ளனர்.

பயணிகள் காத்திருக்க வேண்டுமா :

இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அரசு பேருந்து டிரைவரும், கண்டக்டரும் தங்கள் தனிப்பட்ட விசேஷ வீடுகளுக்கு சென்று வர பேருந்தில் உள்ள பயணிகள் காத்திருக்க வேண்டுமா? அதுவும் பணிநேரத்தில்தான் செல்வார்களா? பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் பேருந்துக்குள் இருக்கிறார்கள் என்ற பொறுப்பு இல்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மகளிரை மதிப்பதே இல்லை :

ஏற்கெனவே, D பிளாக், வழுதூர் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் 4 F பேருந்து பெரிய அளவில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை என்றும் குறிப்பாக இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிரை மதிப்பதே இல்லை எனவும் அங்குள்ள மக்கள் குற்றம்சாட்டும் நிலையில் பொறுப்பான அரசு ஊழியர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு இருக்கலாமா? எனவும் கொந்தளிக்கின்றனர். அதேபோல், என்ன தவறு செய்தாலும் அதிகபட்சம் பணியிடை மாற்றம்தானே? வேலையைவிட்டா தூக்கிவிட முடியும்? என்ற மனநிலையே அவர்களை இதுபோன்ற அலட்சியத்தில் ஈடுபட வைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

Related Link
திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ், விடை பெற்றார்

திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ், விடை பெற்றார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடிக்கு ஷெசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருது

1
2 hrs 20 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau