news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியாவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ரோந்து கப்பல்
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ரோந்து கப்பல்

செஷல்ஸ்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிநவீன ரோந்து கப்பல்

செஷல்ஸ் கடலோர காவல்படைக்கு பிரதமர் மோடி வழங்கினார் :

இந்தியாவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ரோந்து கப்பலை செஷல்ஸ் கடலோர காவல்படைக்கு பிரதமர் மோடி வழங்கினார். வரும் 29ஆம் தேதி செஷல்ஸ் நாட்டின் 50ம் ஆண்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவதற்காக செஷல்ஸ் நாட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் பேட்ரிக் நேரில் சென்று வரவேற்றார்.

மகாராஷ்டிராவில் TET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் :

(Courtesy : ANI)

மத்திய பாஜக அரசை பேப்பர் லீக் அரசு என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. ஏற்கெனவே நீட் இளநிலை தேர்வு வினாத்தாள் லீக்கான நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளும் வெளியாகியுள்ளது. இதனால், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் போர்க் கப்பல்கள் தாய்லாந்து சென்றடைந்தன :

கடற்படையின் செயல்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக, கிழக்குக் கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் உதயகிரி, கவரட்டி, சக்தி ஆகியவை தாய்லாந்து சென்றடைந்தன. இதேபோல் தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான செயல்பாட்டுப் பணியின் கீழ் ஐஎன்எஸ் இக்ஷக், செஷல்ஸ் சென்றடைந்தது.

எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் மர்ம பொருள் வெடிப்பு :

ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். குல்மார்க் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சும்லிவாலி தோக் பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.

அப்போது, வெடிவிபத்தில் ஜூபைர் அகமது பஜாத் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

Related Link
ராமர் கோயிலில் திருட்டு - ரூ.80 லட்சம் மீட்பு

ராமர் கோயிலில் திருட்டு - ரூ.80 லட்சம் மீட்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பால் டேங்கர் லாரி

1
55 mins agoshare
பால் டேங்கர் லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau