Also Watch
Read this
By: Manigandan Raja

காட்டு யானையை கண்டு பொதுமக்கள், பயணிகள் அச்சம் :
இலங்கையின் ஹபரணை பகுதியில் வாகனங்களை வழிமறித்து பழங்களை பறித்து உண்ணும் காட்டு யானையை கண்டு பயணிகள் அச்சமடைந்தனர். ஹபறனை பகுதியில் பிரதான சாலையில் காட்டு யானை ஒன்று, அவ்வழியே சென்ற ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து தும்பிக்கையை நீட்டி ஓட்டுநர் மற்றும் பயணிகளிடையே பழங்களை பிடுங்கி உண்டது.
அடுத்தாண்டு இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் :

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியா வர உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல் தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த 2020-ஆம் ஆண்டு டிரம்ப் இந்தியா வந்தபோது அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற பெயரில் பேரணி நடைபெற்றது.
"ஜோனதன்" ஆமையுடன் பிரதமர் மோடி வரலாற்று சந்திப்பு :

3 நாள் பயணமாக செஷல்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, உலகின் மிக வயதான "ஜோனதன்" ஆமையுடன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை நிகழ்த்தினார். செயின்ட் ஹெலினா தீவில் வசிக்கும் இந்த வகை ராட்சத ஆமை, தற்போது செஷல்ஸ் தேசிய தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.