Also Watch
Read this
By: Manigandan Raja

பனாமா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி :
FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பனாமா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. குரூப் எல் பிரிவில் இடம்பெற்றுள்ள பனாமா மற்றும் இங்கிலாந்து அணிகள் நடத்திய இந்த பலப்பரீட்சையில் 0-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி :
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 17புள்ளி 2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் :

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 354 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 84 ரன்கள் முன்னிலையுடன், நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டாம் லாதம், டேவன் கான்வே ஆகியோர் சதமடித்தனர். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 354 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 113 ரன்னும், பெத்தேல் 74 ரன்னும் எடுத்தனர்.