Also Watch
Read this

அயர்லாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2ஆவது போட்டி வடக்கு அயர்லாந்தில் இன்று ஜூன் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

அயர்லாந்து, இந்திய அணிகள் மோதும் 2ஆவது டி20
முதல் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று 1க்கு 0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், 2க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. இந்திய அணி வெற்றி பெற்றால் 1க்கு 1 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடியும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 17புள்ளி 2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

84 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2ஆவது இன்னிங்ஸ்
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 354 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 84 ரன்கள் முன்னிலையுடன், நியூசிலாந்து அணி 2ஆவது இன்னிங்சை விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டாம் லாதம், டேவன் கான்வே ஆகியோர் சதமடித்தனர். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 354 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 113 ரன்னும், பெத்தேல் 74 ரன்னும் எடுத்தனர்.