news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவில் டிரம்ப் புகைப்படத்துடன் புதிய பாஸ்போர்ட்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவில் டிரம்ப் புகைப்படத்துடன் புதிய பாஸ்போர்ட்

டிரம்ப்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமெரிக்கா புதிய பாஸ்போர்ட்

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு புதிய பாஸ்போர்ட்டுகள் வினியோகம் :

அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது புகைப்படத்துடன் கூடிய புதிய பாஸ்போர்ட்டை வெளியிட்டு உள்ளார். டிரம்ப் தமது மேசையில் இரு கைகளை ஊன்றி, எதிரில் இருப்பவர்களை உற்றுநோக்கும் வகையிலான போட்டோவும் புதிய பாஸ்போர்ட்டை இடம்பெற்றுள்ளது.

டிரம்ப் படத்தின் நேர் எதிர்பக்கத்தில் அமெரிக்க நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர பிரகடனம் கையெழுத்திடப்பட்ட புகைப்படம் அச்சிடப்பட்டு இருக்கிறது. ஜூலை 4ம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினத்தையொட்டி புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இந்த பாஸ்போர்ட்டுகள் வினியோகிக்கப்பட உள்ளன.

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் :

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் இரக்கமின்றி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் இந்த கொடூரத் தாக்குதலில் 15 வயது சிறுமி உட்பட இருவர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் தற்கொலைப் படை தாக்குதல் :

பாகிஸ்தானின் கராச்சி நகரில் குலிஸ்தான் இ ஜவ்ஹர் என்ற பகுதியில் அமைந்துள்ள சிந்து ரேஞ்சர்ஸ் பாதுகாப்புப் படைத் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 4 பேர் உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அங்கிருந்த மற்ற பயங்கரவாதிகள் படையினரை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில் இதில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Related Link
ஈரானின் தக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி தாக்குதல்

ஈரானின் தக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பால் டேங்கர் லாரி

0
10 mins agoshare
பால் டேங்கர் லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau