Also Watch
Read this
By: Manigandan Raja

ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தகவல் :
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 7.02 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், பாகிஸ்தானின் லாகூர், பைசலாபாத், இஸ்லாமாபாத் நகரங்களில் சில இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. அதேபோல, இந்தியாவிலும் தலைநகர் டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை ஜெர்மனியின் புவியியல் ஆராய்ச்சி மையமும் உறுதிப்படுத்தி உள்ளது.
வெனிசுலாவை தாக்கிய கடுமையான இரட்டை நிலநடுக்கங்கள் :

வெனிசுலாவைத் தாக்கிய கடுமையான இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 430-ஆக உயர்ந்துள்ளது. இந்த இயற்கை பேரிடரால் 3 ஆயிரத்து 238 பேர் காயமடைந்ததாகவும், 3 ஆயிரத்து 142 பேர் இடம்பெயர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வெனிசுலாவில் நில நடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்களான நிலையில், மீட்புப் பணி முடிவடையாததால், மாயமான 51 ஆயிரம் பேரின் நிலைமை குறித்து அச்சம் எழுந்து உள்ளது.