Also Watch
Read this
By: Manigandan Raja

"கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்" விருது வழங்கி கவுரவிப்பு :
ஷெசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான "கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்" ((Guardian of the Blue Horizon)) விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், தமக்கு மிக உயரிய விருது வழங்கியதற்காக ஷெசெல்ஸ் மக்களுக்கும், அரசிற்கும், அதிபர் ஹெர்மினிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விருதை தாம் பணிவுடனும், மரியாதையுடனும் ஏற்றுக் கொள்வதாகவும், பருவநிலை மாற்றத்தின் சவால்களுக்கு எதிராகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், வருங்கால சந்ததியினருக்கான தங்கள் கடமையாக கருதும் அனைத்து நாடுகளுக்கும் இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சதிகளை முறியடித்து இந்த ஆண்டே சொந்த நாடு திரும்புவேன் :

தனக்கு எதிரான சதிகளை முறியடித்து இந்த ஆண்டே சொந்த நாட்டுக்கு திரும்பப் போவதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். 2024-ல் வெடித்த மாணவர் புரட்சி காரணமாக, ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு புதிய அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
இதனிடையே, வங்கதேச தீர்ப்பாயம் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்து, மரண தண்டனை விதித்தது. இந்த சூழலில், இந்த ஆண்டே வங்கதேசம் செல்லப்போவதாக ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதல் :
உக்ரைன் மீது ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தகர்க்கப்பட்டன. ரஷ்யாவின் உற்பத்தி திறனை முடக்குவதையும், ஏற்றுமதியைத் தடுத்து பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும், போரின் விளைவுகளை ரஷ்ய மக்களுக்கு உணர வைக்க வேண்டும் என்பதற்காக தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.