news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'Fake News' என்று பதிவிட்ட தர்மன் இயக்குநர்
tv

Also Watch

tv

Read this

'Fake News' என்று பதிவிட்ட தர்மன் இயக்குநர்

தர்மன்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ashwanth marimuthu

வெளியானது 'Love Oh Love' படத்தின் டிரெய்லர் : 


இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் நாராயண், நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள Love Oh Love படத்தின் டிரெய்லர் வெளியாகிருக்கிறது.

காதல் கதையை கொண்ட இந்த படம் வருகிற ஜூலை 10-ம் தேதி வெளியாகிறது. இதற்கு முன், நடிகர் பவிஷ் நாராயணனை 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படம் மூலம் ஹீரோவா அறிமுகம் செஞ்சுருந்தாரு நடிகர் தனுஷ் அதே மாதிரி, தனுஷ் படங்களில், இவர் உதவி இயக்குனரா பணியாற்றி இருக்கிறாரு என்பது குறிப்பிடத்தக்கது.

'Fake News' என்று பதிவிட்ட தர்மன் இயக்குநர் : 

‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்தின் 173-வது படமான 'தர்மன்' படத்த இயக்குறாரு. ஏற்கனவே, "இந்த படம் ஆக்சன் கலந்த கதையாகவும் இந்த படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார் என்றும் இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும்.

என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவிச்சிருந்தாரு. இந்த நிலையில் சமீபத்தில், ‘தர்மன்’ படம் 'THE GOOD DOCTOR' என்ற ஹாலிவுட் தொடரின் தழுவல் தான் என்று சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, 'அந்த செய்தி போலியானது' என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுருக்காரு.

நாட்களில் 'நூறு சாமி' செய்துள்ள வசூல்?


இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்துள்ள நூறு சாமி திரைப்படம் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளியாகியிருந்துச்சு. பெண்களின் மறுமணம் குறித்த கருத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும் பேசியுள்ள இந்த படம் வெளியான 8 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் வெளியாகிருக்கிறது.

இதன் படி, வெளியான 8 நாட்களில் 'நூறு சாமி' திரைப்படம் உலகளவில் ரூ.12 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிருக்கிறது. வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும்னு எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியானது நிவின் பாலியின் 'விஜயம்' அறிவிப்பு டீஸர் :


இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு, ஆர்ஷா சாந்தினி பைஜு, வினய் ஃபோர்ட் (Vinay Forrt) , ஜாஃபர் இடுக்கி (Jaffar Idukki) உள்ளிட்டோர் நடித்துள்ள "விஜயம்" படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகிருக்கிறது.

இந்த படத்தில், நிவின் பாலி பைக் ரேஸராக மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரு. அதே மாதிரி, இந்த திரைப்படத்திற்கு மிதுன் முகுந்தன் இசையமைத்துருக்கிறாரு. நிவின் பாலியின் 50-வது படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை நிவின் பாலியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான JR PICTURES நிறுவனமும் CINEHOLIX தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறாக்காங்க.

தொடர் வசூல் வேட்டையில் 'எங்கள் தங்கம்' : 


நடிகை சமந்தா தயாரித்து, நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படம் கடந்த ஜூன் 19-ம் வெளியாகிருந்துச்சு. முதல் நாளிலேயே உலகளவில் இந்த படம் ரூ.10.70 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகிருந்துச்சு. இந்த வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கூட கொண்டாடிருந்தாங்க.

இந்த நிலையில், 'எங்கள் தங்கம்' திரைப்படம் வெளியான 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகிருக்கு. அதன் படி, சமந்தாவின் 'எங்கள் தங்கம்' படம் வெளியான 9 நாட்களில் உலக அளவில் ரூ.70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிருக்கு. இந்த படம் சமந்தா நடிப்பில் கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு பின் வெளியான படமாகவும் பார்க்கப்படுது.

மண்ணை விட்டு பிரிந்த பாக்யராஜ் : 


பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், 1977-ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' படத்தில் உதவியாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்குனாரு. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வந்த பாக்யராஜை 'புதிய வார்ப்புகள்' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செஞ்சுருந்தாரு இயக்குனர் பாரதிராஜா.

இதன் பின், ஒரு இயக்குநரா மாறி தன்னோட முதல் படமா 'சுவர் இல்லாத சித்திரங்கள்' என்ற படத்தை 1979-ம் ஆண்டு வெளியிட்டுருந்தாரு. அதைத் தொடர்ந்து தன்னோட சொந்தத் தயாரிப்பில் பல படங்களை தயாரிச்சிருந்தாரு பாக்யராஜ்.

இப்படி தனது அயராத உழைப்பின் மூலம் மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்த பாக்யராஜ், மாரடைப்பு காரணமா ஜூன் 27-ம் தேதி உயிரிழந்துருந்தாரு. இவரது உடல் இன்று ஜூன் 28-ம் தேதி சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுருக்கு.

Con City திரைப்படத்தின் முதல் நாள் வசூல்?


இயக்குநர் ஹரிஸ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி, விடிவி கணேஷ் என முக்கிய பிரபலங்கள் பலர் நடித்த Con City திரைப்படம் ஜூன் 26-ம் தேதி வெளியாகியிருந்துச்சு.

மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுவரும் இந்த திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகிருக்கு. அதன்படி, Con City படம் முதல் நாள் வசூலாக ரூ. 80 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Related Link
திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் உடல் தகனம், கண்ணீர் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் உடல் தகனம், கண்ணீர் அஞ்சலி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து.. தரைமட்டமான அறைகள்!

1
1 hr 4 mins agoshare
Fireworksbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau