news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்
tv

Also Watch

tv

Read this

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

கொரட்டூர், சென்னை

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமைச்சர் சேகர் பாபு

தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம் :

அம்பத்தூர் தொகுதியில் நான் ஓட்டு கேட்டு போடும் அளவிற்கு மக்கள் இல்லை என வெளிப்படையாக பேசிய அமைச்சர் சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் தேர்தல் பணிகள் தொடர்பாகவும்
அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பு தொடர்பாகவும் சட்டமன்ற உறுப்பினர் மண்டல குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கொரட்டூரில் உள்ள திமுக தேர்தல் பணிமனையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் வேட்பாளர் டாக்டர் பூர்ணிமா, சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மண்டல கூட தலைவர் பி.கே மூர்த்தி உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை விமர்சனம் செய்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,
எதிர்க்கட் தலைவர் மனநல பாதிக்கப்பட்டவர் மாதரி பேசி வருகிறார்.

நேற்று நடந்த கூட்டத்தில் என்ன பேசுவது என புரியவில்லை என்று கூறுகிறார். என்ன பேசுவது என்று புரியாதவர் ஏன் தேர்தல் பரப்பரைக்கு வர வேண்டும். துணை முதலமைச்சரின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், துணை முதலமைச்சர் பிரச்சாரத்தின் நாளன்று 5 தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தோம்.

அம்பத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டால் மற்ற பகுதிகளுக்கு செல்வது கூடுதல் நேரம் ஆகும் என்பதால் வேறொரு நாளில் பரப்புரையை வைத்துள்ளோம். முதலமைச்சர் அம்பத்தூர் பிரச்சாரத்திற்பு வருவாரா என்ற
கேள்விக்கு,கால நேரத்தை பொறுத்து பிரச்சார சூழலை பொறுத்து முதலமைச்சரின் பிரச்சாரம் அமையும்.

அம்பத்தூரில் பிரச்சாரம் மேற்கொள் மேற்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர்,நான் சொல்லி ஓட்டு போடும் அளவிற்கு மக்கள் இல்லை, முதலமைச்சர்,ஏற்கனவே உள்ள சட்டமன்ற உறுப்பினர்,மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் வட்ட செயலாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முதலமைச்சர் செய்துள்ள திட்டங்களையும், பணிகளையும் தேர்தல் வாக்குகளையெம் மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளனர்.போதிய வரவேற்பு இருக்கிறது மீண்டும் உதயசூரியன் வெற்றி பெறும் என கூறினார்.
விஜயின் ஜனநாயக திரைப்படம் இணையத்தளத்தில் வெளியானது பாஜகவும் திமுகவும் கூட்டு என்ற ஆதவ் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,விஜய் பாஜகவை எதிர்த்து பேசவே இல்லை என விமர்சனம் செய்தார்.

Related Link
மீன் குழம்பு சாப்பிட்டு தூங்க சென்ற மூதாட்டி பலி

மீன் குழம்பு சாப்பிட்டு தூங்க சென்ற மூதாட்டி பலி




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026, 82 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி

3
17 mins agoshare
குஜராத் டைட்டன்ஸ் வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved