Also Watch
Read this
By: Manigandan Raja

எல்கை பந்தயம் :
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மானம்பாக்கி கிரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோவில் களரி திருவிழா முன்னிட்டு மானாமதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் தேசியநெடுஞ் சாலையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து மொத்தம் 28 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.
இந்த போட்டியில் பெரிய மாட்டு பிரிவில் 15 மாடுகளும், சிறிய மாட்டுப் பிரிவில் 13 மாடுகளும் பங்கேற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள் போட்டியை உற்சாகமாகக் கண்டு களித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved