news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அடுத்தவரின் மரணத்தை எதிர்பார்க்கிறார் இபிஎஸ் - முதல்வர் சாடல்
tv

Also Watch

tv

Read this

அடுத்தவரின் மரணத்தை எதிர்பார்க்கிறார் இபிஎஸ் - முதல்வர் சாடல்

ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின்

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தியும், அடுத்தவரின் மரணத்தை எதிர்பார்த்து பேசுவதையும் கடமையாக வைத்திருப்பதாகவும், சாக்கடைக்கு சரி சமமான வார்த்தைகள் பேசும் அவருக்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்றதுக்கு எல்லாம் வாய் கிழிய பேசும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அட்டூழியத்தை கேள்வி கேட்காமல் சைலண்ட் மோடுக்கு சென்று விடுவதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
திறமை​யான நிர்​வாகத்​தால், நிதி நிலை​மையை மீட்​டெடுத்​திருக்​கிறோம். அதன் பயனாக நாட்​டிலேயே முதல் மாநில​மாக 11.01 சதவீத பொருளா​தார வளர்ச்​சியை கொண்டு வந்​திருக்​கிறோம்​.

மகளிர் விடியல் பயணத்​துக்​கான பேருந்​துகளை, திரா​விட மாடல் ஆட்​சி​யில் அதி​கரிக்​கப் போகிறோம். மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிர​மாக உயரப் போகிறது. புது​மைப் பெண் திட்​டத்​தில் ரூ.1,500 ஆக உயரப் போகிறது. இல்​லத்​தரசிகளுக்கு ரு.8,000 கூப்​பன் வழங்​கப்பட உள்​ளது.

மீனவர்கள் விவகாரம்
உக்​ரைன் போரை நிறுத்தி விட்​டேன், அமெரிக்​காவை அலற விட்​டேன் என்று கூறிக் கொண்​டிருக்​கும் விஸ்வகுரு பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்​கை​யுடன் மீனவர் பிரச்​சினை குறித்து பேசச் சொன்​னால் மவுன குரு ஆகி விடு​கிறார். தமிழ்​நாட்டு மீனவர்​களை இந்​திய மீனவர்​களாக நினைத்​திருந்​தால் இப்​படி அல்​லல்பட விட்​டிருப்​பா​ரா? சென்​னை​யில் ஓய்வு பெற்ற நீதி அரசர் அரிபரந்​தாமன், ’ஜீரோ பிஜேபி’ என்ற இயக்​கத்​தைத் தொடங்கி இருக்​கிறார். இதைத் தொடங்கி வைத்​தவர் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனின் கணவர் பரகலா பிர​பாகர்.

ஐபிஎல் போட்டி
பாஜக அமைச்​சர்​கள் தொடர்ந்து மும்​மொழிக் கொள்​கையை தமிழ்​நாடு ஏற்க வேண்​டும் என்று பேசுகிறார்​கள். இதை ஒரு நாளாவது பழனி​சாமி கண்​டித்​திருக்​கிறா​ரா? பொது சிவில் சட்​டம் குறித்து பழனி​சாமி​யின் நிலைப்​பாடு என்ன?

அதி​முக​வுக்கு விழும் ஒவ்​வொரு வாக்​கும் பாஜக​வுக்​கும் விழுகின்ற வாக்​கு. ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்தியது. அதைபோல சட்டமன்றத் தேர்தலிலும் டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்த வேண்டும்.
இவ்​வாறு மு.க.ஸ்டா​லின் பேசி, வாக்கு சேகரித்தார்.

Related Link

"Rest எடுத்து Rest எடுத்து Tired" - விஜயை விமர்சித்த உதயநிதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

0
8 mins agoshare
தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved