Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே போலீஸ் எனக் கூறி தம்பதியை மிரட்டி, மர்ம நபர் 10 ஆயிரம் ரூபாய் பறித்து சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வளத்தி கிராமத்தை சேர்ந்த சாமிநாதன், தன் மனைவியுடன் அதிகாலை நேரத்தில் வேட்டைக்காரன்பட்டி கூட்டுரோடு பேருந்து நிலையம் அருகே நின்றிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கஞ்சா கடத்துகிறீர்களா என மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், மேல்மலையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved