Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே இரண்டு வயது குழந்தை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், புதைக்கப்பட்ட சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மெய்யூர் ஓடை கிராமத்தை சேர்ந்த சாருமதி என்ற இரண்டு வயது குழந்தை சுண்டு விரல் காயம் காரணமாக செங்கல்பட்டு ரங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிகளவில் மயக்க மருந்து தரப்பட்டதால் குழந்தை உயிரிழந்ததாக புகார் எழுந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved