news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எங்களுக்கும் அங்கீகாரம் கொடுங்கள்
tv

Also Watch

எங்களுக்கும் அங்கீகாரம் கொடுங்கள்

தஞ்சாவூர்

141

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tnj main

அய்யம்பேட்டை அருகே இசையமைத்து எழுதி 150-க்கும் மேற்பட்ட கிராமிய மற்றும் சினிமா பாடல்களை பாடி அசத்தியுள்ள நாட்டுப்புற நாயகன் நல்லிச்சேரி திருத்தணி தமிழக அரசு தங்களை போன்ற நாட்டுப்புற கலைஞர்களை தேர்வு செய்து, ஊக்கப்படுத்தி விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

உணவகத்தில் சப்ளையராக வேலை செய்தவர்
நல்லிச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் திருத்தணி (45) இவரது மனைவி மகேஸ்வரி (40) இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே அரசு பள்ளியில் பயின்ற திருப்பதிக்கு சிறு வயது முதலே நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் ஆர்வம் இருந்து வருகிறது. சிறுவயதில் ஒரு உணவகத்தில் சப்ளையராக வேலை பார்த்த இவர் பாடலின் ஆர்வம் காரணமாக உணவக பணியை நிறுத்திவிட்டு பாடல் பாடுவதில் ஆர்வம் செலுத்தினார்.

30 ஆண்டுகளாக கலைத்துறையில்...
சுமார் 30-ஆண்டுகளுக்கு மேல் ஏராளமான பாடல்களை எழுதியும் இசையமைத்தும் சினிமா பாடல்கள், ஆல்பம் பாடல், மேடைக் கச்சேரி என பல்வேறு இடங்களில் தனது தனி திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் திருத்தணி. இவர் பாடிய கொல்லையிலே தென்ன மரம், செக்க செவந்தவளே கண்ணம்மா, அரிக்கன் விளக்கு வெளிச்சத்திலே, அன்னக்கொடி உன்னைத்தேடி போன்ற பாடல்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிரபளமான பாடல்கள் ஆகும்..

நாட்டுப்புற கலைஞர்களை ஊக்கப்படுத்துங்கள்...
தற்போது பாடல்கள் பாடும் வாய்ப்பு குறைந்து வருவதாகவும், நாட்டுப்புற கிராமிய பாடல்களை ரசிகர்கள் கேட்பதற்கும் மற்றும் இது போன்ற நாட்டுப்புறப் பாடல்களை பாடும் கலைஞர்களை ஊக்கப்படுத்தி, கௌரவப்படுத்தி கிராமப்புற பாடல்கள் வளர்ச்சி அடைவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என திருத்தணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Link
மூச்சு விட திணறும் பொதுமக்கள்

மூச்சு விட திணறும் பொதுமக்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved