news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மருத்துவ தம்பதி வீட்டில் கைவரிசை, கம்பி நீட்டிய காதல் ஜோடி அதிரடி கைது
tv

Also Watch

மருத்துவ தம்பதி வீட்டில் கைவரிசை, கம்பி நீட்டிய காதல் ஜோடி அதிரடி கைது

சொகுசாக வாழ ஆசைப்பட்டு சிறைவாசம்

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருமணம் செய்து கொண்டு சொகுசாக வாழலாம் என்று எண்ணி, மருத்துவ தம்பதி வீட்டில் கைவரிசை காட்டிய காதல் ஜோடி தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது. திருடிவிட்டு கம்பி நீட்டிய காதல் ஜோடி சிக்கியது எப்படி? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

மருத்துவர் தம்பதி வீட்டில்...
சென்னை, பள்ளிக்கரணை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட 200 அடி சாலை கோவிலம்பாக்கம் பூபதி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவர் கார்த்திக் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது மனைவியும் மருத்துவர் என்பதால் வீட்டில் சமையல் உள்ளிட்ட வேலைகளுக்காக மயிலாடுதுறை மேலப்பாளையம் பகுதி நடுக்கரை புதிய தெருவை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆர்த்தியை பணியமர்த்தி இருந்தனர்.

தங்க நகைகள், பணம் மாயம்
இந்த சூழலில், பணி முடிந்து வீடு திரும்பிய மருத்துவ தம்பதிக்கு அதிர்ச்சி. வீட்டில் இருந்த சூட்கேஸ் ஒன்று மாயமாகி இருந்தது. அதோடு, வீட்டு பணிப்பெண் ஆர்த்தியும் மிஸ்ஸிங். இதனால் டவுட்டான தம்பதி, முதல் வேலையாக வீட்டில் இருந்த பீரோவை சோதனை செய்தனர். அப்போது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் இருந்த தங்க நகைகள், பணம் மற்றும் ஆடைகள் ஆகியவையும் மிஸ்ஸாகி இருந்தது.

போலீசில் புகார், சிசிடிவி ஆய்வு
இதையடுத்து, மருத்துவர் கார்த்திக், பள்ளிக்கரணை போலீஸில் புகார் அளித்தார். தொடர்ந்து, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார், வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். ஒருபுறம் ஆர்த்தி மீது சந்தேகம் இருந்தாலும், மறுபுறம் ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்யக்கூடாது என்பதற்காக, குடியிருப்பில் இருந்த அத்தனை சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

கடைசி முயற்சியாக லிஃப்டில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில்தான் பணிப்பெண் ஆர்த்தி வசமாக சிக்கிக் கொண்டார். ஒரு பெரிய சூட்கேஸ் மற்றும் சில பைகளுடன் ஆர்த்தி லிஃப்டில் செல்வது பதிவாகி இருந்தது. அப்புறம் கேட்கவும் வேண்டுமா? அலேக்காக ஆர்த்தியை தூக்கியது போலீஸ் படை

சிக்கிய பணிப்பெண்

ஆர்த்தியை காவல் நிலையத்தில் வைத்து முறைப்படி விசாரித்ததில், அனைத்து உண்மைகளையும் கக்கி விட்டார். அதாவது, அபினேஷ் என்ற இளைஞரை ஆர்த்தி காதலித்து வந்ததும், இருவரும் சொகுசாக வாழ ஆசைப்பட்டு, திட்டமிட்டே மருத்துவ தம்பதி வீட்டில் வேலைக்கு சேர்ந்ததும், பின்னர், சமயம் பார்த்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. தொடர்ந்து, அபினேஷையும் அலேக்காக தூக்கியது போலீஸ்.

24 மணி நேரத்தில்...
பிறகு, இருவரும் பதுக்கி வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஆடைகளையும் போலீஸார் மீட்டு மருத்துவர் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர். மேலும், ஆர்த்தியையும் அவரது காதலன் அபினேஷையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, புகார் அளித்த 24 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த காவல்துறைக்கு மருத்துவ தம்பதி நன்றி கூறி விடைபெற்றனர்.

Related Link
ரூ.8,000க்கு திருட்டு ஐபோன், ஏமாற்றிய கல்லூரி மாணவன் படுகொ*

ரூ.8,000க்கு திருட்டு ஐபோன், ஏமாற்றிய கல்லூரி மாணவன் படுகொ*


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சவுதி விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved