Also Watch
Read this
By: Manigandan Raja

திருவாரூர் அழகிரி காலனி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ், தமிழக வெற்றி கழகத்தில் வழக்கறிஞர் அணி மாவட்ட இணை அமைப்பாளராக உள்ளார். இவர் திருவாரூரில் உள்ள நீதிமன்ற வளாகத்துக்கு சென்றார். அங்கு போலீசார் வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே தனது மோட்டார் பைக்கை நிறுத்த சென்ற போது , போலீஸ் வாகனத்தில் அமர்ந்திருந்த தலைமை காவலர் வினோத் என்பவரிடம் ஜீப் அருகே இறந்த நிலையில் கிடந்த நாய் ஒன்றினை அப்புறப்படுத்த சொல்லி உள்ளார்.
தலைமை காவலர் வினோத் இது எனது வேலை இல்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் வினோத்தை பின் தொடர்ந்து வந்த வழக்கறிஞர் ராஜேஷ் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வினோத் வந்தபோது சீருடையுடன் இருந்த அவரை தாக்கி உள்ளார்.

இது தொடர்பாக திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் வினோத் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர் ராஜேஷ் மீது ஐந்து பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தப்பட்டு நன்னிலம் கிளைச் சிறையில் இன்று அதிகாலை அடைக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் மற்றும் காவலர் இடையே நடந்த இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved