Also Watch
Read this
By: Fyrose Banu

கேரளா , கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக கர்நாடகா அணையிலான கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் ஆகிய இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் இரு அணைகளும் அதனுடைய முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணைகளின் பாதுகாப்பு கருதி கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீரானது தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.

கர்நாடக அணிகளிலிருந்து திறந்து விடப்படும் நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று வினாடிக்கு 12,500 கன அடியாக அதிகரித்திருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து செல்கிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved