news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை
tv

Also Watch

இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை

சென்னை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
eps

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ தேர்வு செய்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அதிமுக உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, உரிமையியல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி, இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து இபிஎஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டதாவது:
சூரியமூர்த்தி, அதிமுக உறுப்பினரே அல்ல. உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. எனவே, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு இபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும், வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதி, இந்த மனு குறித்து சூர்ய மூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு, செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சரவை மாற்றத்தில் யாருக்கு ஜாக்பாட்?

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved