Also Watch
Read this
By: Web Team

பெண்களை இழிவாக கருதி மோக பொருளாக நினைக்கும் சமூக விரோதிகளுக்கு ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பு தக்க பாடமாக இருக்கும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல்வர் கூறியது போல் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இனி பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved