மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலய துலா உற்சவத்தையொட்டி மயிலம்மன் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை ஒட்டி, இரவு மாயூரநாதர் ஆலய சன்னதியில் அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவ பெருமானை பூஜிக்கும் நிகழ்வும், தொடர்ந்து சுவாமி அம்பாள் மாயூரதாண்டவம், கெளரிதாண்டவம் ஆடிய நிகழ்வும் நடைபெற்றது. பின்னர், நடராஜர் சன்னதியில் மயில் உருவில் கொளரி தாண்டவக்காட்சியும், அபயாம்பிகை அம்மன் சாபவிமோசனம் நீங்கி அம்பிகை உருவம் கொண்ட நிகழ்வும் நடைபெற்றது.