news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கம்யூனிஸ்டு போட்டியால் கவலையில்லை என அமைச்சர் ரமேஷ் திட்டவட்டம்
tv

Also Watch

கம்யூனிஸ்டு போட்டியால் கவலையில்லை என அமைச்சர் ரமேஷ் திட்டவட்டம்

"எங்கள் வெற்றி தீர்மானிக்கப்பட்ட ஒன்று"

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இடைத்தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து களம் காண்பதால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், முதலமைச்சர் விஜய் இருக்கும் வரை தவெகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும் அமைச்சர் ரமேஷ் கூறி உள்ளார்.

திருச்சி மலைக்கோட்டை கோவிலில்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது;
திருச்சி மலைக்கோட்டை கோவிலில் என்னென்ன முன்னேற்றப் பணிகள் செய்ய வேண்டும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.

ஆய்வுக்குப் பின்பு என்னென்ன பணிகள் செய்ய உள்ளோம் என்பதை அறிவிப்போம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் உலகமே வியக்கும் அளவிற்கு சிறப்பாக நடைபெறும். அனைத்து கோவில் குளங்களும் முறையாக தூர்வாரப்படும்.

கம்யூ. நிலைப்பாடு...
இடைத்தேர்தலில், த.வெ.க அரசிற்கு ஆதரவளித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது குறித்து, நாங்கள்
கவலைப்படுவது கிடையாது. எங்களுக்கு எல்லாமே எங்களுடைய முதலமைச்சர். நடக்கக்கூடிய இடைத்தேர்தலில் த.வெ.க மாபெரும் வெற்றி பெறும். மக்கள் இந்த ஆட்சியில் மிகுந்த சந்தோஷமாகவும் தெளிவாகவும் இருக்கிறார்கள். விஜய் தான் இனி தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளார்கள்.

மின்வெட்டு விவகாரம்
மின்வெட்டு தொடர்பாக இருந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகி
விட்டதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஏற்கெனவே தெரிவித்து உள்ளார். தங்கு தடையின்றி மக்களுக்கு மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் மின் வெட்டு பிரச்சினை இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இவையெல்லாம் மக்களிடம் எடுபடாது.

சேகர்பாபு செயல், கண்டனம்
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை கோவிலில் பொதுவெளியில் கோவிலுக்குள் சென்றது அவமானமா? அதிகாரிகளுக்கு வேறு வேலை இல்லையா? சேகர்பாபுவை அழைத்து
தரிசனத்திற்காக செல்வது தான் அவர்களின் வேலையா?

நான் செல்லும் அனைத்து கோவில்களிலும் மக்கள் செல்லும் பொது வழியில் தான் செல்கிறேன். அப்போது தான், மக்கள் நம்மிடம் பேசுவார்கள் அவர்களுடைய குறைகளை கேட்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறி உள்ளார்.

Related Link
இடைத்தேர்தலில் திமுகவுக்கு தேமுதிக ஆதரவு

இடைத்தேர்தலில் திமுகவுக்கு தேமுதிக ஆதரவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆ.ராசாவை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved