news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓணம் சீசனை முன்னிட்டு விலையேறிய நேந்திரன் வாழை
tv

Also Watch

ஓணம் சீசனை முன்னிட்டு விலையேறிய நேந்திரன் வாழை

மேட்டுப்பாளையம்

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cbe 001

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நேந்திரன் வாழைத்தார் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் சந்தையில் கிலோ 55 ரூபாயிற்கு விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுப்புற பகுதிகளான சிறுமுகை, காரமடை பகுதிகளில் வாழை விவசாயமே பிரதானமாக உள்ளது.

பவானி ஆற்றங்கரை பகுதிகளான இங்கு விளையும் வாழைத்தார்கள் சுவை மிகுந்தது என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரள வியாபாரிகள் நேந்திரன் வாழைகளை வாங்க மேட்டுப்பாளையம் சந்தைக்கு பெருமளவு வருகின்றனர்.

தற்போது ஓணம் பண்டிகை சீசன் துவங்கியுள்ளதை முன்னிட்டு நேந்திரன் வாழைக்கு தேவை அதிகரித்துள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதி வாழை விவசாயிகள் நேந்திரன் வாழைத்தார் அறுவடை பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் இங்குள்ள வாழை சந்தைக்கு கொண்டு வந்து அதன் தரத்திற்கு ஏற்ப ஏலம் மூலம் விலை நிர்ணயிக்கப்பட்டு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். நேந்திரன் வாழை ஓணம் சீசனை முன்னிட்டு கிலோ 50 ரூபாய் முதல் 55 வரை விலை போவதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved