news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெண்ணுக்கு ஒரே உதை!
tv

Also Watch

பெண்ணுக்கு ஒரே உதை!

விழுப்புரம்

78

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vlp main

விழுப்புரம் அதிமுக நலத்திட்ட விழாவில் பரபரப்பு மண்டியிட்டு கூட்டத்தில் நுழைந்த பெண் – கூட்டத்தில் நுழைய முற்பட்ட பெண்ணை மற்றொரு பெண் எட்டி உதைத்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. கலைஞர் அறிவாலயம் முன்பு அதிமுக தொழிற்சங்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டது. நலத்திட்ட உதவிகளை பெற ஏராளமான பெண்கள் திரண்டிருந்த நிலையில், ஒரு பெண் மட்டும் மண்டியிட்டபடி கூட்டத்திற்குள் நுழைந்து நேரடியாக உதவி பெற முயன்றதாக கூறப்படுகிறது.
நலத்திட்டம் வழங்கும் விழாவில் பரபரப்பு

மண்டியிட்டு சென்ற பெண்ணுக்கு உதை

இதனை அங்கு நின்றிருந்த மற்றொரு பெண் எதிர்த்து, அவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது, பின்னால் இருந்து அந்த பெண் மண்டியிட்ட பெண்ணை தொடர்ந்து எட்டி உதைத்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு அங்கு இருந்தவர்களை சிரிப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் நின்றிரூந்த மற்றொரு பெண் செய்த செயல்

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியுள்ளது. மண்டியிட்டபடி கூட்டத்தில் நுழைந்த பெண்ணின் செயல் குறித்து சிலர் விமர்சித்ததுடன், எட்டி உதைத்த பெண்ணின் செயலுக்கு எதிர்ப்பு கருத்துகள் எழுந்துள்ளன. சம்பவத்தைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி, பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Link
அம்மான்னு கூப்பிட்டு 2 மாசம் ஆகுது ஐயா....கதறிய தாய்

அம்மான்னு கூப்பிட்டு 2 மாசம் ஆகுது ஐயா....கதறிய தாய்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved